|
2. Tamilian Wedding Culture and
Traditions
Tamilian marriage is celebrated with the rituals that have been
part of the Tamilian culture. The marriage is basically simple
but not extravagant. The relatives and friends join to take part
in the ceremonies. Customs and traditions remain the same
throughout the Tamilian communities. The horoscopes play a very
important role in finding the prospective partners for the girl
or boy.
When the horoscopes are matched, the agreement between the both
parties takes place. The priest plays an important role in
fixing the date of the marriage. The agreement is placed on the
plate of bananas, coconuts and beetal leaf. This ceremony is
performed at the groom's residence. Girl is given silk sari and
groom is given cash and clothes.
'Paalikali Thalippu' is a
ceremony which is performed two days before marriage where small
clay pots are decorated with sandal paste and kumkum. A little
curd is put in each pot and nine types of grains are sprinkled.
Then they are watered by the married ladies of both sides. After
the marriage, couple throws these pots with sprouted grains in
nearby pond. This is done to seek the blessings of the fish in
the water.
'Kalyanaponnu' is another important ceremony which is performed
before marriage at the houses of the girl and the boy. Seasem
oil is put on the girl and she is given a green saree with green
and red bangles. Girl is put to confinement till marriage.
Groom's father also puts oil on him and gives him cash and
clothes. He is also confined at a place till marriage.
'Panda kaal muhuratham' is the ceremony which is held a day
before marriage and the family gather to seek the blessings of
the family diety. This is done so that everything goes on
smoothly.
One day before marriage, groom and his family reaches the house
of the bride where they are welcomed by the parents of the
bride. They are offered supari, misri, flowers and fruits.
Sandalwood is applied on the boy's forehead. Sweet dish is
offered to the groom's parents. A coconut is broken to ward off
evil spirits.
The ancestors of the both families are remembered and the
priests are invited to have meals and they are given clothes,
sweets, fruits, supari and paan.
Ganesh puja is performed by the parents of the bride along with
the priest. Bride is given sari by the groom's parents. Chandan
and kumkum are applied on her forehead. Her sari is filled with
fruits, turmeric and coconut. Puja is performed of her.
On the wedding morning, bride and groom sit on wooden stools.
Turmeric, kumkum and oil are put on the both and arti is
performed. Then they are given clothes. They go to their
respective homes and dress up for the wedding.
After the mangalsanamam, the groom pretends to go for kashi on a
pilgrimage, but he is stopped by the bride's father. He comes
back to pandal where bride is waiting for her. They exchange
garlands thrice. Now, they sit together on swings and balls of
cooked rice with saffron are thrown in various directions to
ward off evil spirits. The couple is served milk and banana.
This ceremony is called 'Oonjal'.
After this, kanaydanam is held. The corner of the girl's sari is
tied with the shawl of the boy. Their right hands are tied with
a thread. As they each the mandav, boy's feet are washed by the
bride's father. Bride sits on the lap of her father holding a
coconut and offers it to the groom. This way girl is given to
the groom. She is presented a sari by the groom's parents which
she wraps around. She sits in the lap of her father on the heap
of paddy to welcome prosperity. Plough is touched to her
forehead. Groom ties mangalsutra to the neck of the girl.
The groom takes the right hand of the girl with his left hand
and takes seven rounds around the fire. Girl starts each round
by touching the grinding stone.
With this, marriage ceremony is complete. Good wishes and
blessings are showered on the couple.
3. கிறிஸ்தவ திருமணம்
தமிழக்கத்தில் நடைபெறும் கிறிஸ்தவ திருமணம் மிகவும்
சிறப்பு வாய்ந்தது. திருமணகாரியங்கள் முதலாவது மணமகன்
வீட்டிலிருந்து எல்லா காரியங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். மணமகன்
வீட்டிலிருந்து பெண்கேட்டு செல்வது முதல் ஒவ்வொரு காரியமும் ஒழுங்கு
கிரமமாக நடத்தப்பட வேண்டும்.
1. பெண் பார்த்தல்
2. பெண்ணை பேசி முடித்தல்
3. பூ வைத்து நிச்சயம் செய்தல்
4. நிச்சயதார்த்த பட்டு கட்டுதல்
5. திருமண அறிக்கை வாசித்தல்
6. முகூர்த்தம்
7. திருமணம் (மணமகள் ஊரில்)
8. வரவேற்பு மணமகன் இல்லத்தில்
9. சம்பந்தம் கலப்பு
10. மறுவீடு அழைப்பு
இப்படி நடக்கும் திருமணம் மிக சிறப்பானதாக காணப்படும்.

4.பெண் பார்க்க வரும்போது எப்படி
அலங்கரித்துக் கொள்வது?
திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இளம் பெண்களுக்கான
நகைகள் பற்றி தான் இந்த இதழில் பேசப் போகிறோம்! பெற்றோர், தங்கள்
வசதிக்கேற்ப தம் மகள்களுக்கு தங்க நகைகள் அணிவித்து மகிழ்வார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் எத்தனைதான் தங்க நகைகள் செய்து
வைத்தாலும் கூட திருமணத்தின் போது, தலைமுதல் காலை வரை செட்டாக அணிய
ஃபேஷன் நகைகள் தான் கை கொடுக்கிறது.
மேலும் அவ்வப்போது ஃபேஷனுக்கு ஏற்ப ஏராளமான வடிவங்களில் இந்த நகைகள்
வருவதால் மணமகளின் புடவைக்கு, அட்டகாசமாய் பொருந்துகின்றன இந்த ஃபேஷன்
நகைகள். இவை மணமகளை ஒரு தேவதையாய் மாற்றிவிடும் என்பதில் சந்தேகம்
இல்லை.
தன்னைப் `பெண்' பார்க்க வரும்போது ஒரு பெண் எப்படியெல்லாம்
அலங்கரித்துக் கொள்ளலாம் என்று முதலில் பார்க்கலாம். மாப்பிள்ளை
வீட்டார் பார்க்க வருவதற்கு முன்னரே, அவர்களின் கலாச்சாரம், ரசனை,
எதிர்பார்ப்பு போன்றவற்றை முடிந்தவரை தெரிந்து கொள்ள முயற்சி செய்து,
அதற்கு ஏற்றாற் போல் அலங்காரம் செய்வது உறவின் இனிமையை
அதிகப்படுத்தும்! தங்களுக்குப் பொருந்தாத அதிக அலங்காரங்கள் செய்து
கொள்வதாலும், அலங்காரமே செய்து கொள்ளாமல் ``இதுவே போதும்'' என்று
அசால்டாக இருந்து விடுவதாலும், சில சமயங்களில் மாப்பிள்ளை
வீட்டாருக்கு பெண்ணைப் பிடிக்காமல் போக வாய்ப்புகள் உண்டாகி
விடுகிறது. மாப்பிள்ளை வீட்டாரின் டேஸ்டுக்கு பொருந்துமாறு `பாரம்பரிய'
நகைகளா அல்லது `மாடர்ன்' நகைகளா என்று முதலில் முடிவு செய்து கொள்ள
வேண்டும். ‘‘first impression is the best impression" என்பார்கள்.
அதனால் மாப்பிள்ளை, முதல் பார்வையிலேயே பெண்ணை ஓகே சொல்லிவிட என்ன
நகைகள்அணியலாம் என்று பார்க்கலாம்.
உடுத்தும் புடவைக்கு ஏற்றபடி, நகைகளைத் தேர்வு செய்ய வேண்டியதும்
முக்கியம். பொதுவாக எல்லாத் தரப்பினரும் பெண்ணைப் பார்க்கும் போது,
லட்சுமி கடாட்சமாய், அம்சமாய் இருக்க வேண்டும் என்று
எதிர்பார்ப்பதனால், சிம்பிளான அந்தஸ்தான நகைகளை அணியலாம்.
ஒரு நெக்லெஸ், ஆரம், ஜடைக்கு சிம்பிளான ஜடை, பில்லை, காதுக்கு சற்று
எடுப்பான கம்மல் செட் அல்லது ஜிமிக்கி, கை நிறைய வளையல்களும்
அணியலாம். பெரும்பாலும் பெண் பார்க்கும் படலம் பகல் நேரத்தில்
நடப்பதால், பிளைய்ன் நகைகள், எனாமல் நகைகள், மேட்சிங் நகைகள்
போன்றவை பொருத்தமாக இருக்கும். நிகழ்ச்சி கிராண்ட் எனில் கூடுதலாக,
சிம்பிள் நெத்திச் சுட்டியும், ஒட்டியாணம், வங்கியும் அணியலாம்.
தரமான ஒரு கிராம் தங்க நகைகள் அசல் தங்கத்தை விட அசத்தலாக,
வண்ணமயமாக கிடைப்பதால் பெண்கள் அதிகமாக இதை விரும்பி அணிகிறார்கள்.
`மீனாக்காரி' நெக்லெஸ் மற்றும் ஆரங்களை மேட்சிங் வளையல்களுடன்
அணிந்தால் வசீகரமாக இருக்கும்.
பாரம்பரிய கெட்டப்பில் ட்ரெஸ்ஸிங் செய்ய `நஹாஸ்' நகைகள் சரியான
சாய்ஸ்.
ஒன்றிரண்டு முறை பெண் பார்க்க வந்து திருமணம் அமையாமல் போய்
விட்டால் சில பெண்கள் விரக்தி அடைந்து, அலங்காரம் செய்து கொள்வதில்
ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதுண்டு. ஒவ்வொரு முறையும் சிறப்பாக
அலங்கரித்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் பின்னர் உங்கள் நிஜ ஹீரோ
உங்களைப் பார்க்க வரும்போது டல்லாக காட்சியளிப்பீர்கள்.
திருமணம் உறுதியாகி விட்டால், மணப்பெண்ணின் பொன் நகையைவிட முகத்தில்
அரும்பும் புன்னகைதான் பிரகாசமாய் ஜொலிக்கும். இனி திருமணத்துக்கு
முன் நிச்சயதார்த்தத்துக்கு ஏற்ற நகைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
நிச்சயத்தின் போது பெண் செய்து கொள்ளும் அலங்காரம், திருமண
அலங்காரத்துக்கு ஒரு ஒத்திகை என்றே சொல்லலாம், ஏனெனில்
நிச்சயதார்த்தத்தின் போதே கிட்டத்தட்ட முக்கால் மணப்பெண்
ஆகிவிடுவார்கள். இந்தத் தருணத்தில் பெண்கள் புடவைக்கு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். அதாவது உடுத்தப் போவது
பாரம்பரிய `காஞ்சிப் பட்டா', அல்லது வேலைப்பாடுகள் செய்யப்பட்ட `ஃபேன்ஸி
பட்டா' என்பதைப் பொறுத்தே நகை சாய்சும் அமைய வேண்டும்.
அடுத்தபடியாக கவனிக்க வேண்டியது புடவையின் நிறமும் அதிலுள்ள
டிசைனும்தான். புடவை `டார்க்' கலராக பாரம்பரிய பட்டில் இருந்தால்,
அதற்கு பிளையின் நகைகள் அசத்தலாக இருக்கும். அது பெங்காலி
செட்டுகளாகவோ, காசு மாலை, மாங்காய் மாலை, கிளி அல்லது முல்லை
மாலைகளாகவோ இருக்கலாம்! அதற்குத் தகுந்தாற் போல நெக்லெஸ், சுட்டி,
அகலமான தொங்கட்டான்கள், பிளைய்ன் ஜடைபில்லைகளாகளோ தேர்வு செய்யலாம்.
வெள்ளையானக் கல் பதித்த நகைகள், வட நாட்டு பொல்கி நகைகள் இதற்குப்
பொருந்தாது. எடுப்பான நஹாஸ் நகைகள் டீசன்டான மிடுக்கான தோற்றத்தைத்
தரும். புடவையில் நெய்யப்பட்ட புட்டாக்கள், மாங்காய், அன்னம்,
கோடுகள், கட்டங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, அதற்கு ஏற்ப டிசைன்
கொண்ட எந்த நகையை வேண்டுமானாலும் அணியலாம். இதுவே லைட்-கலர் பட்டுப்
புடவைகளுக்கு, வெள்ளியில் செய்து தங்க பார்மிங் செய்யப்படும்
ரூபி-எமரால்டு கல் நகைகள், முத்து செட்டுகள், `அன்-கட் டைமண்ட்
போன்ற கற்கள் பதித்த ஏண்டிக் நகைகள், கெம்புக் கல் நகைகள் ஆகியவற்றை
தேர்வு செய்யலாம். `லைட் கலர்' புடவைக்கு இந்த நகைகள்
கான்ட்ராஸ்டாக தெரியுமாறு அணிய வேண்டியது அவசியம். இல்லாவிட்டால்
நகைகள் எடுபடாமல் போய் விடும்.
இவற்றுள் எல்லா நகைகளும் பெரும்பாலும் எந்தப் பெண்ணுக்கும்
பொருத்தமாக இருக்கும். ஆனால் பெண்ணின் முக அமைப்பையும், உயரத்தையும்
கருத்தில் கொண்டு நாம் அணிய வேண்டியது, நெத்திச் சுட்டியும்,
காதணிகளும் தான். பெரிய வட்ட வடிவ முகம் உள்ள பெண்கள் மிக அகலமான
பதக்கங்கள் உள்ள சுட்டிகளையும், பெரிய ஜிமிக்கிகளையும் தவிர்த்து
மீடியம் சைசில் அணியலாம். அதே போல் நீள முகம் உள்ள பெண்கள் சற்று
அகலமான சுட்டியையும், பெரிய சைஸ் ஜிமிக்கிகளும், அகலமான காதணிகளும்
அணிய வேண்டும்.
அடுத்து வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பட்டுப் புடவைகளுக்கு வருவோம்.
தற்போது எம்ராய்டரி பட்டுப் புடவைகளுக்கு மவுசு அதிகரித்திருப்பதால்
அனேகப் பெண்கள் இதைத்தான் விரும்பி அணிகிறார்கள். இந்த வகை
புடவைகளுக்கு அணிய `கோல்டு பார்மிங்' நகைகளில் ஏராளமான சாய்ஸ்
இருப்பதால் சுலபமாக நகைகளை செலக்ஷன் செய்து விடலாம். மேட்சாக,
புடவையில் அதிக கல் வேலைப்பாடுகள் இருந்தால், குந்தன்-கல் நகை
செட்டுகளையும், ஜர்தோஸி வேலைப்பாடுகள் இருந்தால் ஏண்டிக் பாலிஷ்
செய்யப்பட்ட பொல்கி_கல் நகைகளையும் அணியலாம்.
வண்ண மயமான கற்கள் மற்றும் பீட்ஸ்கள் பொருத்தப்பட்ட நகைகளையும்
பொருத்தமாக மேட்சிங் செய்து அணியலாம். ஆனால் இவை அனைத்தும் சரியான
பொருத்தத்தில் சிம்பிளாக இருக்க வேண்டும். அதாவது, சோக்கர்கள் என்று
பார்த்தால் சுமார் ஒரு இன்ச் அகலத்திலும் அதற்கு மேட்சாக அரை இன்ச்
அகல ஆரமும், தகுந்தாற்போல மற்ற ஆபரணங்களும் அமைய வேண்டும்.
நிச்சயதார்த்தத்தின் போதே மிக கிராண்டாக அலங்கரித்துக் கொண்டால்,
திருமண அலங்காரம் அதற்கும் ஒரு படி மேலே இருக்க வேண்டும். நீங்கள்
நிச்சயதார்த்தத்தில் அணியும் நகைகள் உங்கள் உற்றார் உறவினரின்
ஆர்வத்தை ``அடுத்து திருமணத்துக்கு என்ன நகை'' என்று தூண்டும்
விதமாக இருக்க வேண்டும்.
நன்றி குமுதம்
5.
அலங்கார "கேக்' வகைகள் கைவினைக்
கலைஞர் திருமதி சிந்து சுரேஸ்
வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டிற்கு கலை, கலாசாரங்கள் மற்றும்
உணவு முறைகள் எனப் பலதரப்பட்ட முறைகள் ஊடுருவி செல்வாக்குச்
செலுத்தி வருகின்றன. இவற்றுள் உணவுப் பொருட்களே மிகவும்
முக்கியத்துவம் பெறுகின்றன. உணவுப்பொருட்கள் என்பது அனைவரையும்
கவரக்கூடியதொன்றாகும். இதனால், பலரும் இந்த உணவுப் பொருட்களில்
ஆர்வம் காட்டி அதனை விரும்பிச் செய்து வருகின்றனர். இந்த உணவுப்
பொருட்களில் கேக் அலங்கார முறையானது மிகவும் பிரசித்தமடைந்து
வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
மேற்கத்தேயவர்களிடமிருந்து வந்த இந்த திருமண கேக் வெட்டும் முறை
தற்பொழுது எமது நாட்டிலும் சரி பிற நாடுகளிலும் சரி, மிகவும்
பிரபல்யமான முறையில் வளர்ச்சி பெற்று வருகின்றது. எமது நாட்டில்
கிறிஸ்தவர்களின் கொண்டாட்ட வைபவங்களின் போது இருந்து வந்த இந்த
முறையானது காலப்போக்கில் பிற சமயத்தவர்களின் வைபவங்களின் போதும்
முக்கிய இடம் பெற்று வருகின்றது.
தற்காலத்தில் விஞ்ஞான, தொழில்நுட்ப முறைகள் முன்னேறி மக்களைப் பல
வகையில் சிந்திக்கத் தூண்டியுள்ளன எனலாம். அதே போன்று கேக்
அலங்காரத்திலும் நவீன முறைகள் தலை காட்டத் தொடங்கியுள்ளன. கேக்
அடித்து "பேக்' செய்து பின்னர் ஐசிங் போட்டுக் கொண்ட காலம் அருகி
தற்பொழுது றெஜிபோமில் உருவாக்கப்படும் அலங்கார ஐசிங் கேக் வகைகள்
நடைமுறைக்கு வந்துள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது.
கேக் அலங்காரம், திருமண வைபவங்கள், பிறந்த தின விழாக்கள் மற்றும்
பண்டிகைகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக பதிவுத்
திருமண வைபவத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் Structure கேக்கினை
றெஜிபோமில் அலங்கரிப்பதில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறானவர்கள் புதுமையைப் புகுத்தி சமூகத்தினரின் தேவைக்கேற்ப தமது
திறமைகளை பயன்படுத்தி பலவகையான அலங்கார கேக் ஐசிங்கை அலங்கரிப்பதைக்
காணக்கூடியதாகவுள்ளது. இந்த வகையில் இது குறித்த தகவல்களை "சங்கமம்'
வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக கைவினைக் கலைஞர் திருமதி சிந்து
சுரேஸை சந்தித்தோம். அவர் இது குறித்த தகவல்களை எம்முடன்
செய்முறையாக விளக்கி கலந்துரையாடினார். அவரிடம் நாம் கேட்ட
கேள்விகளையும், அவர் வழங்கிய தகவல்களையும் இங்கு தருகின்றோம்.
· தங்களுக்கு இந்தத் துறையில் ஆர்வம் ஏற்படக் காரணம்?
எப்போதிலிருந்து இதை செய்து வருகின்றீர்கள்?
நான் எனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து கொண்ட பின்னர்
கைவேலைப்பாடுகள், தையல், "பெயின்ரிங்' மற்றும் "கேக்' அலங்காரம்
எனப் பலதரப்பட்ட துறையில் பயிற்சியைப் பெற்ற போதிலும் எனக்கு
விருப்பமாகவும் இலகுவானதாகவும் செய்யக்கூடியதாக இருந்த இந்த கேக்
அலங்கார வேலைப்பாட்டைத் தேர்வுசெய்து திறம்படக்கற்று தேர்ச்சி
பெற்றேன். அத்துடன் எனது பெற்றோர் மற்றும் கணவர் நல்ல ஒத்துழைப்பு
வழங்கி என்னை மேலும் ஊக்கப்படுத்தியமையால் நான் இந்த துறையை தேர்வு
செய்தேன். கடந்த மூன்று வருடங்களாக இந்த துறையில் ஈடுபட்டு
வருகின்றேன்.
· இத்துறையின் மூலம் தாங்கள் பெற்றுவரும் நன்மைகள் என்ன?
இந்து துறையில் முக்கியமான விடயம் பொறுமையும், நுணுக்கமும்,
இயல்பாக சிந்திக்கும் ஆற்றலும் தான். பொறுமையாக ஒவ்வொன்றையும்
செய்யும் போது நாம் எம்மை ஒருநிலைப்படுத்தி "மெடிரேசன்' செய்வதை
போல் செய்கின்றோம். நுணுக்கமாகவும் creativity யுடனும் செய்யும்
போது எம்மிடம் இருக்கும் வித்தியாசமான எண்ணங்கள், கலை வண்ணங்கள்
வெளிப்படுகிறது. இதனால், போட்டி நிறைந்த இத்துறையில் நிலைத்து
நிற்க முடிகிறது.
· எவ்வகையான மாணவர்கள் இந்த பயிற்சி மேற்கொள்ள விரும்புகின்றனர்?
இதனால் அவர்கள் பெறும் நன்மைகள் என்ன?
கை வண்ணத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் கேக் அலங்காரத்தை
பயில்கின்றார்கள். மற்றும் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும்
பெண்களும் அத்துறையை விரும்புகின்றனர். தற்போதைய விலைவாசியின்
நிமித்தம் அனைவரும் வேலை செய்தாலேயே போதுமான வருமானத்தை
ஈட்டிக்கொள்ள முடியும். அதனால் இவ்வாறான கைவேலைப்பாடுகளில் தம்மை
ஈடுபடுத்தி கொள்வதால் வீட்டில் இருந்த படியே ஒரு வருமானத்தை
பெறக்கூடியதாக இருக்கிறது. · இன்றைய காலத்தில் இத்துறையின் வளர்ச்சி
எப்படி என்று எண்ணுகின்றீர்கள்?
நவீன யுகத்தில் இந்த கேக் அலங்கார வளர்ச்சி வேகமாக அதிகரித்துக்
கொண்டு வருகின்றது. முன்னைய காலத்தில் கேக், கேக்கிற்கு பட்டர்,
ஐசிங், அதற்கு பூ என்று இருந்த காலம் மாறி றெஜிபோமில் sturucture,
Suger flower, இந்த கேக்கை அழகாக வைப்பதற்கு Stands என்று பல
வகையான அலங்காரங்கள் வந்து விட்டன. நாளுக்கு நாள் இந்த அலங்காரங்கள்
மாறிக் கொண்டே வருகின்றது. மணப்பெண்ணின் சாறிக்கேற்ப றெஜிபோமில்
செய்யும் Structure இற்கு கற்கள், சீக்குயின்ஸ், றிபன், பீட்ஸ்,
பூக்கள் என்று அலங்காரங்கள் பலவகையாக மாறிக் கொண்டே உள்ளது.
·கேக் ஐசிங் மற்றும் pillers,கேக் அலங்காரம் போன்றவற்றின் செய்முறை
குறித்து கூறுங்கள்?
இந்த அலங்காரத்திற்கு முதலில் றெஜிபோம், (Fomika , தடிப்பான
றெஜிபோம், போட் அல்லது வேறு பலகை போட், கண்ணாடி போட் போன்றவற்றையும்
பயன்படுத்த முடியும்), கட்டர்கள் (Fondant), றிபன், மகரந்தம் ,
கம்பி, வெள்ளை ரேப், பச்சை ரேப், "டஸ்ற்' போன்ற அலங்காரப் பொருட்களை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுத்ததாக என்ன அலங்காரம் செய்யப் போகின்றோம் எனத்
தீர்மானித்த பின்னர் அவற்றிற்கு தேவையான அளவு ஐசிங் சுகர்,
ஜெலற்றின், கலரிங், தண்ணீர், கிளிசரின், லிக்குயிட் குளுக்கோஸ்
போன்ற பொருட்களை எடுத்துக் கொள்ளவேண்டும்.
முதலில் றெஜிபோமை எடுத்து "போட்' டில் எமக்குத் தேவையான இடத்தில்
வைக்க வேண்டும். றெஜிபோமை cover பண்ணுவதற்கு பாவிக்கும் ஐசிங்கை
பொன்டன்ற் ஐசிங் (Fondant) என்று கூறுவோம். இனி Fondant ஐசிங்
செய்வதற்கு 5 தேக்கரண்டி ஜெலட்டின், 60ட்டூ தண்ணீர், 1 1/2
மேசைக்கரண்டி கிளிசரின், 4 மேசைக்கரண்டி லிக்குயிட் குளுக்கோஸ்
ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இந்த
கலவைக்குள் ஐசிங் சுகரை சிறிது சிறிதாகப் போட்டு ஒட்டாத பதம்
வரும்வரை குழைக்க வேண்டும். (கிட்டத்தட்ட 900ஞ் ஐசிங் சுகர்
தேவைப்படும்) இந்த Fondant ஐசிங்கை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து
பாதுகாக்க முடியும். ஃதணஞிட ண்டஞுஞுt போட்டு சுற்றி வைத்தால் 15
நாட்கள் வரையும் வைத்து பாவிக்க முடியும்.
Fondant ஐசிங்கை செய்து முழுவதுமாக ஒரே கலரைச் சேர்க்காமல் தேவையான
அளவுக்கு மாத்திரம் கலர் சேர்த்தால் மிகுதியானவைக்கு நாம் மீண்டும்
ஒரு ஐசிங் செய்யும் போது வேறுகலரை சேர்த்து பாவிக்க முடியும்.
இப்போது தயாராகியுள்ள Fondant ஐசிங்கை எடுத்து ஒரு பலகையில் வைத்து
நன்றாக மட்டப்படுத்த வேண்டும். கலக்கப்பட்ட ஜெலட்டின் கலவையை நாம்
செய்வதற்கு தயார்படுத்தி வைத்துள்ள றெஜிபோமில் பூசி மட்டப்படுத்திய
ஐசிங்கைப் போட்டு கவர் பண்ண வேண்டும். பூக்கள் செய்வதற்கு ஒரு
தேக்கரண்டி ஜெலட்டின் 4 தேக்கரண்டி தண்ணீரையும் கலந்து வேறு
பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதனுள் இந்தக் கலவையை ஒரு சில்வரில்
விட்டு அந்தப் பாத்திரத்தினுள் கொதிக்கவைக்க வேண்டும். பின்னர் இதனை
ஐசிங் சுகருடன் கலந்து பாச்மென்ட் ஐசிங்கை செய்யவும். இந்த
ஐசிங்கில் பூக்கள் இலைகளை செய்து எடுக்கவும். இப்பூக்களை
குளிர்சாதனப்பெட்டியில் வைத்து 12 மாதங்களுக்கு பாதுகாக்க முடியும்.
இப்பூக்களை றெஜிபோமில் செய்யப்பட்ட Structure கேக்கில் வைத்து
அலங்கரிக்கலாம். இறுதியில் கீழே அடிப்பகுதியில் அழகான றிபனை
ஒட்டிவிடலாம். ஐசிங் பூக்களுக்குப் பதிலாக கடையில் விற்கும்
துணிப்பூக்களையும் வைத்து அலங்கரிக்கலாம். இப்பூக்களை வைத்து
செய்யும் போது ஐசிங் பூக்களை வைத்து செய்யப்படும் கேக்கிற்கு
அறவிடப்படும் கட்டணத்தைவிட சிறிது குறைவாகவே விலை
தீர்மானிக்கப்படும்.
· எவ்வாறான கேக் வகைகளை செய்கின்றீர்கள்? இதன் மூலம் பெற்றுக்
கொள்ளக்கூடிய வருமானம் எப்படி?
பிறந்த நாள் கேக், திருமண Structure கேக், Rich கேக் ஆகியவற்றை
செய்து விற்பனை செய்கின்றேன். முற்கூட்டியே இதற்காக ஓடர்களை செய்து
விடுவார்கள். அதனால் எனக்கும் அது சுலபமாக இருக்கும். சாறிக்கேற்ற
நிறங்களில் செய்து கொடுப்பதால் அது மிகவும் கவரக்கூடியதாக
இருப்பதாகப் பலரும் தெரிவிக்கின்றனர். வருமானம் என்று சொல்வோமானால்
நாம் எவ்வளவு திறமையாகவும் நேர்த்தியாகவும் செய்கின்றோமோ
அதற்கேற்பவே அதன் வருமானத்தையும் நாம் பெற முடியும் . என்னைப்
பொறுத்த மட்டில நான் என்னால் இயலுமான வகையில் மிகவும் திறமையாகவும்
புதிய புதிய நுணுக்கங்களையும் பயன்படுத்தி செய்கின்றேன். இதனால்
எனக்கு நல்ல ஓடர்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நான் நல்ல
வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றேன். பொதுவாக நாம் ஒரு கேக்
அலங்காரத்தைச் செய்யும் போது எமக்கு 1000 ரூபா செலவாகின்றது என்றால்
எமது நேர விரயத்திற்கும் சேர்த்து மேலும் 1000 ரூபாவைக் கூட்டி
அறவிட முடியும். பற்றன்ஸ் கூடக்கூட அதன் பெறுமதியும் அதிகரிக்கும்.
அவர் எமக்கு வழங்கிய தகவல்களுக்காக நன்றியைத் தெரிவித்து
விடைபெற்றோம்..
நிஷாந்தி பிரணவராஜா
|